நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,650 பறக்கும் படைகள்: தேர்தல் ஆணையம்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 1650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது
வேட்பாளர் அல்லது அவரின் முகவர்கள்அல்லது கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் தகுதியான ஆவணங்கள் இல்லாமல் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்துச் சென்றாலும் ரூபாய் 10 ஆயிரத்துக்கு மேல் மதிப்பு உள்ள விளம்பர தட்டிகள் தேர்தல் பொருட்கள் போதைப்பொருட்கள் அல்லது அன்பளிப்பு பொருள்களை எடுத்துச் சென்றால், அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
பறக்கும் படைகளின் ஆய்வு மற்றும் பறிமுதல் செய்யும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ குழுவினர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 550 குறிக்கோள் 8 மணி நேரத்துக்கு ஒரு குழு வீதம் மொத்தம் 1650 பறக்கும் படைகள் இயங்கி வருகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது