1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (16:40 IST)

சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் சனிக்கிழமை வேலை நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என்றும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது
 
இந்நிலையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க இருக்கும் நிலையில் சனிக்கிழமையும் வேலை நாள் தான் என்றும் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது