தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் நிலைமை விரைவில் சீரடையும்: முதல்வர் ஸ்டாலின் பதிவு..!
- சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அண்ணாமலை பாராட்டு
- இனிமேலாவது தங்கள் தவறுகளை திருத்தி கொள்ளுங்கள் -சசிகலா
- வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா- இரட்டைக் குழந்தைகளுடன் மீட்பு!
- சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முக்கிய அறிவிப்பு
சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே தகவல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கன மழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற மாநிலங்களுக்கு கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (12696/ 22208) ரத்து.
கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16102), சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (20605) ரத்து.
மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயில் ரெயில் (12623) ஆகிய ரயில்கள் ரத்து.
சென்னை எழும்பூர் - செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (20681) ரத்து.
தாம்பரத்தில் இருந்தும், சென்னை சென்டிரல் - மைசூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12609) ரத்து.
சென்னை கடற்கரையில் இருந்தும், சென்னை சென்டிரல் - மங்களூரு செல்லும் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22637) திருவள்ளூரில் இருந்தும், சென்னை சென்டிரல் - மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12609) சென்னை கடற்கரையில் இருந்தும், சென்னை சென்டிரல் - ஜோலார்ப்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16089) அரக்கோணத்தில் இருந்தும், சென்னை சென்டிரல் - ஆமதாபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22919) திருவள்ளூரில் இருந்தும், சென்னை சென்டிரல் - பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) காட்பாடியில் இருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Edited by Siva
