திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (20:00 IST)

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அண்ணாமலை பாராட்டு

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர்கள், திமுக  நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், போலீஸார் உள்ளிட்டோர்  வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்துள்ளனர். என்று கூறி, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் மக்கள் இயல்பு  நிலைக்கு திருப ஆரம்பித்துள்ளனர். அவர்களின் அடிப்படை தேவையாக தண்ணீர்தான் உள்ளது.

சென்னையில் தேங்கிய மழை நீர் சதவீதம் வடிந்துவிட்டது. இன்னும் 30 சதவீதம் தேங்கியுள்ளது. நாளைக்குள் அதுவும் மீண்டுவிடும் என்ற  நம்பிக்கையுள்ளது.

கடந்த 4 நாட்களாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள், அரசு அதிகாரிகளும், முன் களப்பணியாளர்களும் தொடர்ந்து களத்தில் உள்ளனர். மக்கள் அதிகாரிகளை நம்புகின்றனர். ஆனால்  அரசியல்வாதிகளை நம்பத் தயாராக இல்லை . அரசியல்வாதிகள் தங்களை  மாற்றிக் கொண்டு சரியான முறையில் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.