தொடர்புடைய செய்திகள்
- 'மிக்ஜாம்’ புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம் - முதல்வர் உத்தரவு
- சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அண்ணாமலை பாராட்டு
- இனிமேலாவது தங்கள் தவறுகளை திருத்தி கொள்ளுங்கள் -சசிகலா
- வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா- இரட்டைக் குழந்தைகளுடன் மீட்பு!
- சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முக்கிய அறிவிப்பு
சென்னையில் நிலைமை விரைவில் சீரடையும்: முதல்வர் ஸ்டாலின் பதிவு..!
சென்னையில் நிலைமை விரைவில் சீரடையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் நிலைமை விரைவில் சீரடையும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் தான் வெள்ள நீர் தேங்கியிருக்கும் இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் புயல் மற்றும் பெரு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலை பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்க களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
