வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 6 டிசம்பர் 2023 (20:00 IST)

வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா- இரட்டைக் குழந்தைகளுடன் மீட்பு!

nameetha
சென்னை துரைப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை நமீதா  அவரது இரட்டை குழந்தைகளுடன் மீட்கப்பட்டார்.

மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர்கள், திமுக  நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், போலீஸார் உள்ளிட்டோர்  வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு உதவி செய்து வருகின்றனர்.

சென்னையில்  ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை  நாளை மத்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் பார்வையிட்டுகிறார்.

இந்த நிலையில், சென்னை பள்ளிக்கரணை  நாராயணபுரம் ஏரியின் கரை  நேற்று உடைந்து, துரைப்பாக்கத்தில் உள்ள எர்க்டிக் வளாகத்தில் நுழைந்தது. இங்கு நடிகை நமீதா தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில்,  மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை நமீதா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வீட்டு மாடியில் நின்று உதவிக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தேசிய பேரிடர் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இதுகுறித்த புகைபப்டம் வைரலாகி வருகிறது.

நேற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தகவல் தெரிவித்த நிலையில், அவரையும், அமீர்கானையும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.