திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (19:30 IST)

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

Chennai Beach
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர்கள், திமுக  நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், போலீஸார் உள்ளிட்டோர்  வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு உதவி செய்து வருகின்றனர்.

இந்த  நிலையில், சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொன்டார். புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி பகுதிகளில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருவதுடன் நிவாரண உதவிகள் பற்றியும் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 04445674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரு நாய்கள் குடிநீர் வாரியத்தில் குடிநீர்த்தொட்டிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டடிற்கு இலவச குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.