செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (17:54 IST)

காங்கிரஸ்காரனுக்கு ஆயுதம் ஏந்தவும் தெரியும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசம்

evks
காங்கிரஸ் காரனுக்கு கொடி பிடிக்கவும் தெரியும் ஆயுதம் ஏந்தவும் தெரியும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதற்கு காங்கிரஸ் பிரமுகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இதுகுறித்து கூறிய போது காங்கிரஸ்காரர்களுக்கு கொடி பிடிக்கவும் தெரியும் என்றும் ஆயுதம் எதுவும் தெரியும் என்றும் மகாத்மா காந்தி மட்டுமல்ல நேதாஜியும் எங்கள் தலைவர் தான் என்றும் கூறியிருந்தார் 
 
நாங்கள் வாங்கி தந்த சுதந்திரத்தால் தான் மோடி பிரதமராகி என்று ஆட்டம் போட முடிகிறது என்றும் ராகுல் காந்தியிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் என்றும் பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள் நுபுர் சர்மாவால் எழுந்த எதிர்ப்பை திசை திருப்பவே இந்த விசாரணை என்றும் அவர் கூறினார்