செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 13 ஜூன் 2022 (12:19 IST)

காவல்துறை - காங்கிரஸ் தொண்டர்கள் தள்ளுமுள்ளு: சென்னையில் பரபரப்பு

congress
காவல்துறை மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் 
 
அதேபோல் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்
 
இதற்கு காவல்துறை அனுமதி தரவில்லை என்பதால் தடையை மீறி காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
அதேபோல் புதுச்சேரியில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது