ராகுல் காந்தியிடம் 10 மணி நேரம் விசாரணை: இன்றும் ஆஜராக உத்தரவு!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று அமலாகத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரான நிலையில் இன்றும் அவர் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி ஆஜரானார்
அவரிடம் பத்து மணி நேரம் விசாரணை நடந்ததாகவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியானதூ.
இந்த நிலையில் மேலும் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும் இந்த சம்மனை ஏற்று அவர் இன்றும், அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.