1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mari selvarj diects mk stalin video soon

திமுக குடும்ப இயக்குனராக மாறிட்டாரா மாரி செல்வராஜ்?!.. இது அவருக்கு சரியா வருமா?..

mari selvaraj
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கிய மாரி செல்வராஜ் அதன்பின் கர்ணன், வாழை, மாமன்னன், பைசன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களின் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை தொடர்ந்து திரைப்படங்களாக எடுத்து வருகிறார். இது தொடர்பான விமர்சனங்களுக்கு ‘சாதிக்கு எதிரான திரைப்படங்களை நான் தொடர்ந்து இயக்குவேன்’ என சொல்லியிருந்தார்.

தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவின் பிரச்சார வீடியோவை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் முக ஸ்டாலினை நடிக்கவைத்து ஒரு பாடலை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். போன தேர்தலில் ‘ஸ்டாலின்தான் வராரு.. விடியல் தரப்போறாரு’ என்கிற பாடல் திமுகவுக்கு கை கொடுத்தது.

அதேபோன்ற ஒரு பாடலை இந்த முறையும் உருவாக்கி அதை ஸ்டாலினை வைத்து எடுக்க திட்டமிட்டிருக்கிறது திமுக. அந்த வீடியோவைத்தான் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளாராம்.. இதற்கான பொறுப்பை திமுக மாரி செல்வராஜிடம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது..

ஏற்கனவே உதயநிதியை வைத்து மாமன்னன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். அடுத்து உதயநிதியின் மகன் இன்பநிதி சினிமாவில் அறிமுகமாகும் படத்தையும் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். தற்போது ஸ்டாலினை வைத்தும் வீடியோவை இயக்கவுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது மாரி செல்வராஜ் திமுகவின் குடும்ப இயக்குனராகவே மாறிவிட்டது போல தெரிகிறது

சமூக பிரச்சனைகளை பேசும் மாரி செல்வராஜ் இப்படி ஒரு அரசியல் கட்சியிடம் சிக்கிவிட்டாரே என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு!.. அலட்சியமே காரணம்!..