1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vanathi srinivasan comment about vijay talk in velore

விஜய் என்ன வேணா பேசட்டும்!. வின்னர் நாங்கதான்!. தெறிக்கவிட்ட வானதி சீனிவாசன்!..

vanathi
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வழக்கம் போல் திமுகவுக்கு எதிராக மிகவும் ஆவேசமாக பேசினார். முதல்வர் ஸ்டாலின் சார் எல்லோரும் எங்கள் நண்பர்கள் என சொல்கிறார்.. எல்லோரும் நண்பர்கள் என்றால் கரூர் சம்பவத்தில் ஏன் என் மீது பழி போட்டார்கள்?.. ஏன் தவெக பொதுக்கூட்டங்களுக்கு போலீசார் அனுமதி கொடுப்பதில்லை? என அவர் கேள்வி எழுப்பினார்..

மேலும் ‘நாம் தீயசக்தி திமுகவுகுக் எதிராக மட்டுமே போராடி வருகிறோம்.. பேசி வருகிறோம்.. இது புரியாமல் நான் வேறு யாரையோ சொல்வது நினைத்துக் கொண்டு சிலர் வாண்டடாக வண்டியில் ஏறி வந்து என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை’ என அதிமுக கூட்டணியை மறைமுகமாக விமர்சித்திருந்தார்..

இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ‘விஜய் புது புது வார்த்தைகளை கண்டுபிடித்து பேசினாலும் இறுதியாக திமுகவில் தோற்கடிக்கப்போவது தேசிய ஜனநாயக கூட்டணிதான்.. விஜய் மேடை ஏறலாம்.. வசனம் பேசலாம்.. கூட்டத்தையும் கூட்டிக் காட்டலாம்.. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் வாக்குகள் விழும்.. ஏனெனில் திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் உண்டு’ என அவர் பேசியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
எனக்கும் பேச தெரியும்.. வேண்டாம்னு பாக்குறேன்.. டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் பதிலடி...