காங்கிரஸ் எம்.பிக்கள் தாக்கப்பட்ட விவகாரம்: சபாநாயகரிடம் புகார்!
போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்பிக்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்பிக்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத் துறை கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் விசாரணை செய்தது. இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் போராட்டம் செய்தனர்
டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தாக்கப்பட்டார் என்றும் அதே போல் ஜோதிமணி எம்பியும் தாக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பிக்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை சந்தித்து புகார் அளித்துள்ளனர் .