1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. o paneer selvam answer to ttv dinakaran comment

எனக்கும் பேச தெரியும்.. வேண்டாம்னு பாக்குறேன்.. டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் பதிலடி...

ops ttv
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் ‘திமுக 5 வருடங்கள் சிறப்பாக ஆட்சி செய்திருக்கிறது.. மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும்’ என்று சொல்லி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னார். மேலும் சட்டசபையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் ‘ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார்’ என கூறியிருந்தார்.

இதையடுத்து ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைவார் அல்லது திமுக கட்சியில் சேர்ந்துவிடுவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஒருபக்கம், ஓபிஎஸ் தரப்புக்கு திமுக 2 தொகுதிகளில் போட்டியிட சீட் கொடுக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது.

இது அதிமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ‘ஓபிஎஸ் பதவிக்காக  எதையும் செய்ய துணிந்து விட்டார்.. அதிமுக தொண்டர்கள் தெய்வமாக நினைக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் படி ஓபிஎஸ் நடந்துகொள்கிறார். அதை தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஓபிஎஸ் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணையட்டும். ஆனால், ஜெயல்லைதா இருந்தவரை ஒருமாறியும் அவர் இறந்த பிறகு ஒரு மாறியும் நடந்து கொள்கிறார்.. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் களங்கம் ஏற்படுத்துவதை மன்னிக்க முடியாது.. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.. எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் இதைவிட ஒரு துரோகம் இல்லை’ என அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரன் பேசியது பற்றி கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ‘டிடிவி தினகரன் மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் பேசுவதை போல என்னாலும் பேச முடியும். நாகரீகம் கருதி அவர் பற்றி நான் பேசவில்லை’ என கூறியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
கட்டாயப்படுத்தி முதல்வர் ஆக்கினார்கள்!.. கொளுத்திப்போட்ட ஓபிஎஸ்!...