1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 16 ஜூன் 2022 (07:31 IST)

ஜனாதிபதி தேர்தல்: காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை

BJP
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து ஜூலை 14ம் தேதி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்தாலும் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை போட்டியிட வைக்க முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் குடியரசுத் தலைவரை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய பாஜக தீவிர முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் எதிர்க்கட்சிகளும் சம்மதிக்கும் வகையில் ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அவரை குடியரசு தலைவராக போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது