செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (09:03 IST)

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி ஆஜர்: காங்கிரஸ் கட்சியினர் கைது!

Rahul Gandhi
டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் கட்சியில் எம்பி ராகுல்காந்தி ஆஜர் ஆகவிருப்பதை அடுத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் திரண்ட காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை டெல்லி காவல்துறை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கு நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். 
 
ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகும் போது பிரமாண்டமான பேரணி நடத்தப்போவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதனை அடுத்து டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூடிய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது
 
இதனையடுத்து அனுமதியை மீறி பேரணி நடத்த முயற்சித்த காங்கிரஸ் கட்சியினரை டெல்லி காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது