தொடர்புடைய செய்திகள்
- இதை செய்யலனா லைசென்ஸ் ரத்து..! – பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!
- தமிழகத்தில் 10 பொறியியல் கல்லூரிகள் மூடல்- அண்ணா பல்கலை உத்தரவு
- 220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்? புதிய பாடப்பிரிவுகளுக்கு AICTE அனுமதி மறுப்பு
- மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஆசிரியர்..வைரல் வீடியோ
- தோழியின் தாய் திட்டியதால் மாணவி தற்கொலை
பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் இயங்கி வரும் அரசு சாலை மற்றும் போக்குவரத்துக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி வர்ஷா நேற்றிரவு விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வந்த வர்ஷா, நேற்றிரவு இரவு உணவு சாப்பிட்டு வந்தபின், தன் அறையில் இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சில நாட்களுக்கு முன், வர்ஷாவின் காதில் ஒருபூச்சி புகுந்துவிட்டதாகவும், இதற்காக அவர் சிகிச்சைக்குச் சென்று வந்த பின்னரும் அவரால் சரியாகப் படிக்கமுடியாமல் தேர்வு சரியாக எழுதவில்லை என சக மாணவிகளிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
