வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (08:17 IST)

இதை செய்யலனா லைசென்ஸ் ரத்து..! – பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!

அண்ணா பல்கலைகழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகள் சிலவற்றில் போதுமான பேராசிரியர்கள் இல்லாத நிலையில் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ள நிலையில் பொறியியல் அட்மிசன்களும் பல கல்லூரிகளில் குறைந்துள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைகழகம் 476 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில் 225 கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான உபகரணங்கள், தகுதியான பேராசிரியர்கள் இல்லாதது தெரிய வந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள பல்கலைகழகம் உரிய வசதிகளை செய்யாவிட்டால் அங்கீகார நீட்டிப்பு ரத்து செய்யப்படும் என்றும், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் எச்சரித்துள்ளது.