1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Enforcement department raid in Thangamani house

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் சோதனை: பெரும் பரபரப்பு!

தங்கமணி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் இன்று மீண்டும் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
மேலும் நாமக்கல்லில் மட்டும் 10 இடங்களிலும் ஈரோட்டில் 3 இடங்களிலும் சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை செய்யப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
அய்யப்பன் கோவிலில் இன்றுமுதல் நெய் அபிஷேகம் செய்ய அனுமதி: கேரள அரசு அறிவிப்பு.