வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (21:07 IST)

எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சட்டப்படி எதிர்கொள்வோம்: தங்கமணி

எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சட்டப்படி எதிர்கொள்வோம்: தங்கமணி
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்
 
ஒரே நேரத்தில் 69 இடங்களில் நடந்த சோதனையில் சற்றுமுன் முடிவடைந்துள்ளது. 2.16 கோடி ரூபாய் பணம், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை கைப்பற்றப்பட்டன என கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் போலீசாரின் சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி எத்தனை வழக்குகள் வந்தாலும் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை அதிமுக சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றிபெறும் என்றும் இன்று காலை முதல் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து அதிமுக தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.