ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 20 டிசம்பர் 2021 (07:08 IST)

மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டத்தொடர்: முதல்வர் ஆலோசனை!

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கலைவாணர் அரங்கில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தற்போது கொரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதை அடுத்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதால் மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
 
ஜனவரி 5ஆம் தேதி முதல் கவர்னர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பார்வை என்பது குறிப்பிடத்தக்கது.