கர்நாடகாவில் 7 ஆயிரம் மாணவர்களுக்கு HIV!.. அதிர்ச்சி செய்தி!..
எய்ட்ஸ் என அழைக்கப்படும் உயிர் கொல்லி நோய் பரவலாக ஒழிக்கப்பட்டுள்ளது என பலரும் நம்புகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. இப்போதும் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும்அரசு மருத்துவமனைக்கு சென்றால் HIV வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தெரிய வரும்.
அதே நேரம் 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது குறைந்திருக்கிறது. கட்டுக்குள் வந்திருக்கிறது. சரியான மருந்துகளை உட்கொண்டால் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பல வருடங்கள் வாழ முடியும் என்கிற முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒருபக்கம், ஆணுறை பயன்படுத்தும் பழக்கம் என்பது தற்போது ஆண்களிடம் பரவலாக அதிகரித்திருக்கிறது..
அதேநேரம், இந்தியாவில் HIV வைரஸ் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை.. இந்நிலையில்தான் கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7 ஆயிரத்திற்கும் ற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு HIV வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியிருக்கிறது.
இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நோய் தொற்றை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ மற்றும் பரிசோதனை முகாம்களை நடத்த அந்த மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.