செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (12:38 IST)

தங்கமணி வீட்டில் திட்டமிட்டு சோதனை; அரசியல் காழ்ப்புணர்ச்சி! – ஈபிஎஸ், ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. இவரது வீடு, அலுவலகம் மற்றும் தங்கமணியின் மகன் உள்ளிட்ட உறவினர்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பிட்காயினில் பணத்தை வாங்கி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் வீட்டில் இதேபோல சோதனை நடந்த நிலையில் தற்போது தங்கமணி வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ரெய்டு குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஈபிஎஸ் – ஓபிஎஸ், இது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடத்தப்படும் சோதனை என்று தெரிவித்துள்ளனர்.