1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. election date will be annoucned tomorrow

நாளை தேர்தல் தேதி அறிவிப்பு?!.. இன்றோடு முடியும் திமுக ஆட்சி!..

mk stalin
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சரியாக சொன்னால் 07.05.2021 அன்று திமுக ஆட்சிக்கு வந்தது.. அதன்பின் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான், தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி நாளை அறிவிக்கபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அப்படி பார்த்தால் மார்ச் 14ம் தேதியான இன்றோடு திமுக ஆட்சி முடிவுக்கு வருகிறது..

தேர்தல் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வருகிறது.. எனவே அரசு புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவிக்க முடியாது. முதலமைச்சரும், அமைச்சர்களும் கூட அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது. தலைமைச் செயலகத்தில் கூடி ஆலோசிக்க முடியாது.. முக்கிய பிரச்சினை என்றால் மட்டும் அதுவும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின்னரே அதை செய்ய முடியும்..

இதையடுத்து தலைமை அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்றாலும் முக்கிய மேல் அதிகாரிகள் பணிக்கு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.. நிலுவையில் உள்ள ஆவணங்களை முடித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் இன்று நடைபெறவிருக்கிறது.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
எரிபொருள் விலை உயர்வு!.. இண்டிகோ விமான கட்டணம் அதிரடி உயர்வு!.. பயணிகள் அதிர்ச்சி..