1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor vadivelu said dmk is best

வசனம் வேணா பேசலாம். ஒன்னும் செய்ய முடியாது!. விஜயை அட்டாக் பண்ணும் வடிவேலு!..

vadivelu
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு.. ஆனால் கடந்த பல வருடங்களாகவே அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறுவதில்லை.. எனவே திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி பேச தொடங்கி விட்டார். ஏற்கனவே 2011 தேர்தலில் விஜயகாந்தை திட்டுவதற்காகவே திமுக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போனார் வடிவேலு.

ஆனால் அந்த தேர்தலில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகா மாறியதால் வடிவேலு அசிங்கப்பட்டார்.அதன்பின் சினிமாவில் வடிவேலுக்கு ஏற்றம் அமையவில்லை.. அதேநேரம் மாமன்னன் படத்தில் நடித்த போது உதயநிதியுடன் பழக்கம் ஏற்பட்டது.. அப்படியே திமுகவுக்கு நெருக்கமானார்.. தற்போது சில திரைப்படங்களில் நடித்தாலும் அவ்வப்போது திமுக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார் வடிவேலு..

இந்நிலையில் நேற்று திமுக விழா ஒன்றில் பேசிய வடிவேலு ‘முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஆயிரம் கொடுத்ததை பார்த்து அவரின் எதிரிகள் அதிர்ச்சியாகிவிட்டார்கள்.. அவர்களால் ஸ்டாலினை சமாளிக்க முடியவில்லை.. மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் மட்டும் அலறுகிறார்கள்.. இன்னும் பல நல்ல விஷயங்களை முக ஸ்டாலின் செய்யப் போகிறார்.. அவர் சாதாரணமான ஆள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. நீங்கள் பேசவேண்டிய வசனத்தை மேடையில் பேசலாம்.. ஆனால் உங்களால் எதுவும் செய்ய முடியாது.. செய்யக்கூடிய கட்சி திமுக மட்டும்தான்.. திமுக மட்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டை அழித்து விடுவார்கள் இந்த கட்சியை விட்டால் வேறு கட்சி இல்லை.. திமுகவை அழிக்கவேண்டும் என பேசிய எவரையும் காணவில்லை.

தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றி விடுவார்கள்.. ஏனெனில் தட்டிக் கேட்பதற்கு அந்த பக்கம் யாரும் இல்லை. எவ்வளவு பெரிய நெருக்கடியாக இருந்தாலும் சந்திக்கக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே.. அவரின் ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்கிறது.. 200க்கும் மேற்பட்ட தொகுதியில் திமுக வெற்றி பெறும்’ என்று அவர் பேசியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
ஈராக்கில் அமெரிக்க போர் விமானம் நொறுங்கி விழுந்தது.. 6 பேர் பலி.. ஈரான் வீழ்த்தியதா?