தொடர்புடைய செய்திகள்
- நாளையுடன் பிரச்சாரம் ஓவர்!.. சூடுபிடிக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரம்!..
- இப்போதுதான் சைக்கிள் ஓட்டவே ஆரம்பித்துள்ளார் - விஜய்யை கடுமையாக விமர்சித்த நடிகை ஆர்த்தி
- திமுகவுக்கு பிரச்சாரம்!. களத்தில் இறங்கிய ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால்!...
- தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?.. விகடன் கருத்துக்கணிப்பு!..
- செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பு..!
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?!.. இதெல்லாம் யூஸ் பண்ணி ஓட்டு போடலாம்!...
தமிழகத்தில் சட்டபை தேர்தல் வருகிற 23ம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளிலும் சேர்த்து மொத்தம் 4023 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேருக்கு வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. பழைய வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு இறுதியாக இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நாளையோடு பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. எனவே, அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வாக்களர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எதையெல்லாம் கொண்டு சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் சில வழிமுறைகளை அறிவித்திருக்கிறது.
ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பேன் கார்டு, MNREGA அடையாள அட்டை, வங்கி/அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகம், ஓய்வூதிய அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, ஒன்றிய/மாநில அரசுகள் PSU நிறுவன அடையாள அட்டை, எம்.பி/எம்.எல்.ஏ அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும், கட்டணமில்லா வாக்காளர் உதவி எண் 1950 அ|றிவிக்கப்பட்டிருக்கிறது.