1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. election commission enquiry about vijay compaign

விஜயின் பிரச்சாரத்தில் நடந்தது என்ன?.. களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்..

vijay
தவெக தலைவர் விஜய் நேற்று பெரம்பலூர் மற்றும் கொளத்தூர் என இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். பெரம்பூரில் பேசி முடித்து அவர் கொளத்தூர் சென்றபோது அவரை பார்ப்பதற்காக அங்கே நிறைய கூட்டம் கூடியிருந்தது. போலீசாரிடம் கூறப்பட்டிருந்த எண்ணிக்கையை விடவும் அதிகளவில் அங்கே கூட்டம் கூடியிருந்தது. இதையடுத்து அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக இரண்டு நிமிடத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு செல்லுமாறு காவல்துறை விஜயை வலியுறுத்தியதால் அவரும் சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

ஒருபக்கம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிதாக சொல்லி விஜய் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.. பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸை வழி மறுத்தது, 5 ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியது, விதிமுறையை மீறி அதிக கூட்டத்தை கூட்டியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் 5 பிரிவுகளின் மேல் விஜயின் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்..

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ‘விஜய் பிரசாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்.. விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பான விவரங்கள் கோரப்பட்டுள்ளன.. பிரச்சாரத்தில் அனைவருக்கும் சமமான நடைமுறைகளை பின்பற்றுமாறு டிஜிபிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம்’ என தெரிவித்திருக்கிறார்..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
25 ஏக்கர் நிலத்தை 51 லட்சத்துக்கு வாங்கினாரா சீமான்?!.. ட்ரோல் பண்ணும் நெட்டிசன்கள்!..