25 ஏக்கர் நிலத்தை 51 லட்சத்துக்கு வாங்கினாரா சீமான்?!.. ட்ரோல் பண்ணும் நெட்டிசன்கள்!..
திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அல்லது எதிராக நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் இயக்கத்தை தொடங்கியவர் சீமான். கட்சி துவங்கியது முதலே திராவிட சித்தாந்தத்தையும், திராவிட கட்சிகளையும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதை எடுத்து அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் அவருக்கு வாக்களித்து வருகிறார்கள் தற்போது 8 சதவீத வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு இருக்கிறது.இந்நிலையில்தான் வேட்பு மனுவில் தனது சொத்துக்கள் பற்றி சீமான் குறிப்பிட்ட கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது..
தனக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை என தெரிவித்திருக்கிறார் சீமான். மேலும் சீமானின் அசையும் சொத்துக்கள் 39.81 லட்சம் எனவும், அவரின் மனைவி கயல்விழியின் சொத்து மதிப்பு 3.44 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சீமான் குடும்பத்தில் 19.50 லட்சம் மதிப்பில் தங்க நகைகள் தங்க நகைகள் இருப்பதாகவும், 25 ஏக்கர் நிலத்தை 2025-ல் 50 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாகவும், அந்த நிலம் தற்போது தன்னிடம் இல்லை எனவும் குறிப்பிட்டி இருக்கிறார்.. அதோடு, கையிருப்பாக 50 ஆயிரம் பணம் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து 25 ஏக்கர் நிலத்தை 51 லட்சம் ரூபாய்க்கு சீமான் வாங்கி இருக்கிறார்.. அதுவும் 2025ம் வருடம் இப்படி ஒரு நேர்மையாளர் நமக்கு கிடைத்ததற்கு நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்..
இதையடுத்து 25 ஏக்கர் நிலத்தை 51 லட்சம் ரூபாய்க்கு சீமான் வாங்கி இருக்கிறார்.. அதுவும் 2025ம் வருடம் இப்படி ஒரு நேர்மையாளர் நமக்கு கிடைத்ததற்கு நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்..

