வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (07:13 IST)

தமிழகத்தில் இன்று ஜேபி நட்டா தேர்தல் பிரசாரம்: ராதிகாவுக்கு வாக்கு கேட்கிறார்..!

jp nadda
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக தேசிய தலைவர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். முதல் கட்டமாக பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகத்திற்கு நேற்று இரவு திருச்சி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் அவர் நான்கு தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சிதம்பரம் வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசும் ஜேபி நட்டா, அதன் பின்னர் கரூர் வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக ஜேபி நட்டா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் 
 
விருதுநகரில் நடிகை ராதிகாவுக்கும், திருச்சியில் அமமுகவின் செந்தில்  நாதனுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்த பின்னர் திருச்சியில் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டதால் பிரசாரம் மட்டும் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva