வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (21:40 IST)

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? எடப்பாடி பழனிசாமி

edapadi palanisamy
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை  சந்திக்கவுள்ளன.
 
எனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
 
அதிமுக ஆட்சிக் காலம் தான் தமிழகத்தில் பொற்காலம். எங்களது ஆட்சியை பற்றி முதல் அமைச்சர் ஸ்டாலின் இருண்ட காலம் என்று கூறுகிறார். யார் ஆட்சியைப் பற்றி குறை கூறுகிறீர்கள்? திமுகவின் இந்த 3 ஆண்டுகால ஆட்சிதான் இருண்டகாலம் என்று விமர்சித்தார்.
 
மேலும், 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக மக்களுக்கு என்ன செய்தது? 3 ஆண்டுகளில் 3 லட்சம் கோடிதான் கடன் வாங்கினீர்கள். மக்களுக்கு என்ன செய்தீர்கள்? 
 
அதிமுக கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அதிகாரம் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. மக்கள் முக்கியம் என்பதால் பாஜக கூட்டனியில் இருந்து விலகினோம் என்று தெரிவித்துள்ளார்.
 
கடந்த தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்த  நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அக்கூட்டணியை முறித்துக் கொண்டு,இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.