வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2024 (23:34 IST)

பாஜகவோடு அண்ணன் ஸ்டாலின் நட்பு பாராட்டியிருந்தால்....- திருமாவளவன் பிரசாரம்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது.
 
இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவில் மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து வரும் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளன.
 
இந்த நிலையில், இன்று சிதம்பரத்தில் நடைபெற்று வரும் பிரச்சார கூட்டத்தில் விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் பங்கேற்று பேசிவருகிறார்.
 
அவர் பேசியதாவது:

பாஜகவோடு அண்ணன் ஸ்டாலின் நட்பு பாராட்டியிருந்தால், அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. மோடி, அமித்ஷா கும்பலுக்கு அச்சம் இருக்கிறது என்றால் தமிழ் நாட்டு முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலினை கண்டுதான் அச்சம். சமூக நீதியை பாதுகாப்பதுதான் நமது நோக்கம். அரசியலைப்பு சட்டத்தை பாதுகாப்பதுதான் நமது நோக்கம். ஜன நாயகத்தை பாதுகாப்பதுதான் நமது நோக்கம் என்று எத்தனை நெருக்கடி வந்தாலும் அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள தயார் என்ற நெஞ்சுரத்தோடு பாசிச பாஜக அரசை விரட்டியடிப்பதற்கான வியூகத்தை அமைத்திருக்கிறார் அண்ணன் ஸ்டாலின் என்று கூறினார்.