1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (20:31 IST)

மோடிக்கும் சமத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

stalin
தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது.
 
இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவில் மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து வரும் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளன.
 
இந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இன்று சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
அவர் கூறியதாவது; இடஒதுக்கீட்டை பறிக்க பல்வேறு வழிகளில் பாஜக முயற்சி மேற்கொள்கிறது. பாஜக- பாமக கூட்டணியை பாமக தொண்டர்களால் ஏற்க முடியவில்லை. 
 
மோடிக்கும் சமத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. பலரின் தியாகத்தால் கிடைத்ததுதான் சமூக நீதி; வளர்ச்சியடைந்த நாடு உருவாக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். 
 
வாஷிங் மெஷின் ’மேட் பை பிஜேபி’ - மோடி வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வாஷிங் மெஷினில் உள்ளே சென்றால் ஊழல்வாதிகள்  தூய்மையாகின்றனர். என்று தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.