வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (19:02 IST)

மதவாத பாஜகவை கேரளாவில் வேரூன்ற விடமாட்டோம்- பினராயி விஜயன்

நாட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
 
அதேசமயம், நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை குற்றம்சாட்டி, கடுமையாக விமர்சனம் செய்து, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 
 
காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
 
இந்த நிலையில், கேரளாவில் பாஜவை வேரூன்ற விட மாட்டோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மதவாத  பாஜகவை கேரளாவில் வேரூன்ற விடமாட்டோம். கேரளாவில் அனைத்து இடங்களிலும் தோற்பதுடன், இங்கு பாஜக 2வது இடத்தைக் கூட பெறாது என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய அளவில் தீவிரமாக இணைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.