தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!. 9 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்..
7 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டதால் அந்த 7 தொகுதிகளும் காலியாக இருக்கும் நிலையில் அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ம் தேதி இன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 7:00 மணிக்கு மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்நிலை வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை அந்த தொகுதி மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள். இந்த தேர்தலில் தவெக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது..
தவெக ஆட்சி அமைந்து ஐந்து மாதங்களில் இந்த தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்த இரண்டு தொகுதிகளில் எப்படியும் வென்று விட வேண்டும் என தவெக நினைக்கிறது. முதல்வர் விஜய் அந்த இரண்டு தொகுதிகளிலும் பொதுக்கூட்டத்தில் பேசியதோடு பல கிராமங்களுக்கும் நேரில் சென்று ரோட் ஷோ செய்து வாக்குகளை சேகரித்தார்.
தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மதுராந்தகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதேபோல் தாராபுரத்தில் 17.55 வாக்குகள் பதிவாகியிருந்தது. 2026 சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணிக்கு பதிவான வாக்குகளை ஒப்பிட்டால் சற்று குறைவாகவே இருக்கிறது..