புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 மார்ச் 2024 (07:26 IST)

சூடு பிடித்தது தேர்தல் பிரச்சாரம்: இன்று முதல் களத்தில் இறங்குகிறார் எடப்பாடி பழனிசாமி..

Edappadi
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பை முடித்துவிட்டு பிரச்சாரத்துக்கு கிளம்பிவிட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நாம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று முன்தினம் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக தமிழகத்தில் 33 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அவர் தனது பிரச்சாரத்தை இன்று திருச்சியில் இருந்து தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களும் திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் அதே திருச்சியில் இருந்து தான் தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டமாக அண்ணாமலை, சீமான் உட்பட பலரும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளதாக கருதப்படுகிறது.

Edited by Siva