பெண்களுக்கு மாதம் ரூ.3000..! அதிமுக முக்கிய வாக்குறுதிகள்..!!
பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தேர்தல் அறிக்கையையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில் 133 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
அதிமுக வாக்குறுதிகள்:
ஆளுநரை நியமிக்கும்போது மாநில அரசின் கருத்துகளை கேட்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக மாற்று தேர்வு முறை உருவாக்கப்படும். நாடாளுமன்றத் குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். இருசக்கர வாகனங்களுக்கு தனி பாதை அமைக்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். குற்ற வழக்கு சட்டங்களில் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 150 நாட்களாக அதிகரிக்க வலியுறுத்தப்படும்.
மத்திய அரசின் திட்ட நிதி பக்ரிவு 60:40 என்ற விகிதத்திற்கு பதிலாக 75:25 சதவீகிதமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசால் செயல்படுத்ஹ்டப்பட்டு வரும் இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு ஒதுக்கீடு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை மீண்டும் வழங்க வலியுறுத்தப்படும். முல்லைப்பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண அதிமுக நடவடிக்கை எடுக்கும். பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்கு அதிமுக தொடர்ந்து எதிர்க்கும்.
காவிரி குண்டாறு வைகை இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படும். கோவதாவரி- காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மழை நீர் திட்டத்தை தேசிய அளவில் கொண்டு செல்ல மத்திய அரசை வலியுறுத்தப்படும். கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்துவோம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிரிமிலேயர் வருமான வரம்பு மத்திய அரசால் 8 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை 12 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
உயிர்க்காக்கும் மருந்துகளை காக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவ பணியாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு 5 ஆயிரம் ரூபாயும், கரும்பு டன்னுக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 133 வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.