திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (17:54 IST)

நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்..! திருச்சியில் ஏற்பாடுகள் தீவிரம்..!

Stalin
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.
 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில், தேர்தல் பிரச்சாரங்களும் களைகட்டி வருகிறது. மு.க.ஸ்டாலினின் முதல் பிரசார பொதுகூட்டம் நாளை  மாலை 5 மணிக்கு திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது. 
 
இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
 
இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

 
முன்னதாக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் நாளை மாலை 4.45 மணிக்கு திருச்சிக்கு செல்கிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.