தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முடியாதா?!.. சட்டசபையில் செங்கோட்டையன் Vs பழனிச்சாமி மோதல்...
தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க மேலும் 8 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்தன. அதன் காரணமாக விஜய் முதலமைச்சரானார். அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆறு எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு உடனடியாக தவெகவில் இணைந்துவிட்டனர்.
இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த கோபத்தை நேற்று எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் காட்டிவிட்டார். நேற்று சட்டசபையில் பேசிய பழனிச்சாமி அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கிறார்கள்.. ராஜினாமா செய்த சில நிமிடத்தில் வேறு கட்சியில் இணைகிறார்கள்.. இது எப்படி சாத்தியம்/ என அவர் கேட்டார்..
அதற்கு பதில் சொன்ன அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா?.. அவரை அதிமுகவில் சேர்த்தது குதிரை பேரம் இல்லையா? என பதிலடி கொடுத்தார்..
இதற்கு பதில் சொன்ன பழனிச்சாமி அவர் முறையாக வேட்பு மனு தாக்கல் செய்யாத காரணத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.. தவெக வேட்பாளரை ஒரு பொருட்டாகவே நான் எடுத்துக் கொள்ளவில்லை என கூறியிருக்கிறார்.
மேலும், கோபமடைந்த பழனிச்சாமி எழுந்து ஆவேசமாக சத்தம் போட்டார்.. அவருடன் அதிமுக எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்றனர். சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் அமருங்கள்.. அமருங்கள் என்று கூறினார். அதற்கு ஏன் நாங்கள் நிற்கக் கூடாதா? தவெக எம்.எல்.ஏக்களை எங்களால் விலைக்கு வாங்க முடியாதா? என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.