1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister nirmalkumar explain about paranthur

பரந்தூர் விமான நிலையத்திற்கு எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டது?!.. சி.டி.நிர்மல்குமார் விளக்கம்!..

ct nirmal kumar
கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது.  தமிழக அரசு சார்பில் பரந்தூரில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்பட்டு அதற்கான வேலைகள் துவங்கப்பட்டன. ஆனால், பரந்தூரில் வசிக்கும் சில கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நீர் நிலைகள், ஏரிகள் பாதிக்கப்படும் எனவும், அங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால் மழை வெள்ளம் வரும்போது சென்னை வெள்ளக்காடாக மாறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாறிய நிலையில் நேற்று சட்டசபையில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு மக்களுக்கு இழப்பீடும் கொடுக்கப்பட்டு விட்டது என்று திமுக தரப்பு கூறியது..

இந்நிலையில் இன்று சட்டசபையில் இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் நிர்மல் குமார் ‘பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மொத்தமாக 5846 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. அதில் பட்டா நிலம் 3,774 ஏக்கர்/ அதில் மூன்று போகும் விளையும் விவசாய நிலங்கள் 2681 ஏக்கர். அரசு நிலங்களாக காட்டப்பட்டவை 1972 ஏக்கர். இதில் கிட்டத்தட்ட 1558 ஏக்கர் நீர்நிலைகள்.. இதுவரைக்கும் 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை.. இதுவரைக்கும் 1802 ஏக்கர்கள் அதாவது 48 சதவீதம் நிலம்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது’  என்று கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கூட்டணியை திருமா அறிவித்தும் கண்டுகொள்ளாத விஜய்!. அப்செட்டில் விசிக!...