1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor devan joining in tvk soon and meeting vijay

கேரளாவிலும் கொடியை காட்டும் விஜய்!.. தவெகவில் இணையும் நடிகர் தேவன்!..

devan vijay
தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் தேவன். தற்போது கேரளாவில் பாஜகவில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில்தான், பாஜகவிலிருந்து அவர் தற்போது விலகியிருக்கிறார். மேலும், விரைவில் அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைவதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேவன் ‘பாஜகவில் இருந்தால் அரசியல்வாதியாக எனது கனவை நிறைவேற்ற முடியாது என நினைத்தேன்.  எனவேதான், பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.  தவெகவில் இணைவது தொடர்பாக பேசுவதற்கு விஜய் சிலரை என்னிடம் அனுப்பினார். எங்களுக்கிடையே மிகவும் விரிவான மற்றும் சுவாரஸ்யமான உரையாடல் நடந்தது.

இறுதியாக, சென்னையில் உள்ள தவெகவின் மூத்த தலைவர்களுடன் ஆன்லைன் கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். கொள்கை அளவில் தவெகவில் இணைய சம்மதித்தேன். அவர்களிடம் விஜய்யைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என கேட்டேன்.. வருகிற செப்டம்பர் 10ம் தேதி நான் விஜயை சந்திக்கவுள்ளேன்.  அந்த சந்திப்புக்காக காத்திருக்கிறேன். தவெகவில் எனக்கு மாநில தலைவர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளனர்’ என கூறியிருக்கிறார்.

விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அந்த மாநிலத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தை வளர்க்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ ஓட்ட முடியாது.. அரசின் விதிமுறையால் மும்பை ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சி...