ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஜூலை 2024 (22:15 IST)

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு.. அதிகாரபூர்வ அறிவிப்பால் அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் மின் கட்டணத்தை 4.83% மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியது என்று கூறப்படுகிறது. புதிய கட்டண விபரங்கள்:
 
401 - 500 யூனிட் வரை ரூ.6.15ல் இருந்து ரூ.6.45ஆக உயர்வு
 
501 - 600 யூனிட் வரை ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்வு
 
601 - 800 யூனிட் வரை ரூ.9.20ல் இருந்து ரூ.9.65ஆக உயர்வு
 
801 - 1000 யூனிட் வரை ரூ.10.20ல் இருந்து ரூ.10.70ஆக உயர்வு
 
1000 யூனிட்டுக்கு மேல் இனி ஒரு யூனிட்டுக்கு ரூ.11.80 மின் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிப்பு
 
புதிய மின் இணைப்பு வாங்குபவர்ககுக்கும் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது
 
Edited by Siva