திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (07:47 IST)

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி நேற்று 112 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளதாகவும் எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்பதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றும் கூறப்படுகிறது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்று நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது பெரும் நெரிசல் ஏற்பட்டதாகவும் அந்த நெரிசலில் பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 என உயர்ந்து உள்ளதாகவும் மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் மருத்துவமனை அருகே எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்பதாகவும் இதயத்தை நொறுக்கும் காட்சிகள் பார்க்க முடிகிறது என்றும் அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva