தொடர்புடைய செய்திகள்
- இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- 8 வயது சிறுவனை கடித்த வெறிநாய்.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
- சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!
- இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?
- சென்னை முதல் நெல்லை வரை அரசியல் கொலைகள்.. சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைவு: டாக்டர் ராமதாஸ்
தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் வெள்ளி விலை உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதாகவும் வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 6,800 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 54,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,270 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,160 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 99.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
