48 முக்கிய ஈரானிய தலைவர்களை கொன்றுவிட்டோம்.. டிரம்ப் கொக்கரிப்பு..!
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 48 முக்கிய ஈரானிய தலைவர்களை அமெரிக்க ராணுவம் தனது வான்வழி தாக்குதல்கள் மூலம் கொன்றுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தாக்குதல் தங்களின் திட்டத்தை விட மிக சிறப்பாகவும், துல்லியமாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த ராணுவ நடவடிக்கையால் ஏற்படக்கூடிய உலகளாவிய பின்விளைவுகள் குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை. "எண்ணெய் விலை உயர்வு பற்றியோ அல்லது ஹார்முஸ் நீரிணை மூடப்படுவது குறித்தோ எங்களுக்கு எந்த கவலையுமில்லை" என்று அவர் மிகவும் ஆணித்தரமாக தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானிய ராணுவத்தின் முதுகெலும்பை உடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் ஐக்கிய அரபு அமீரகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதால் இந்த மோதல் உலகப் போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது.
Edited by Siva