1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

சென்னை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்கம் விலை ஒரு சவரன் 54 ஆயிரத்தை தாண்டிய நிலையில் அதன் படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து மீண்டும் 54 ஆயிரத்தை தங்கம் விலை தாண்டி உள்ளத்தை அடுத்து தங்க நகை பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,760 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 உயர்ந்து ரூபாய் 54,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,230 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 97.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 97,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!