1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Easwaran says about admk and dmk

அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: கொமதேக தலைவர் ஈஸ்வரன்..!

easwaran mla
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுகக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் ’அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார் 
 
கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார் என்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அளித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணி கட்சியை பாஜக அழித்துவிடும் என்றும் அதிமுக என்ற கட்சியை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்றும், பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
அசத்தாலான சிறப்பம்சங்களோடு வெளியானது Realme 12x 5G! – விலை இவ்வளவுதானா?