வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2024 (09:15 IST)

8 தொகுதிகள் சாதகமாக இல்லை.. முதல்வருக்கு பறந்ததா உளவுத்துறை ரிப்போர்ட்?

தமிழகத்தில் உள்ள 8 தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இல்லை என்று உளவுத்துறை தமிழக முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாகவும் இதையடுத்து முதல்வர் சுதாரித்து அந்த தொகுதிகளுக்கு கூடுதலாக சில அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினாலும் உளவுத்துறை முதல்வருக்கு அனுப்பி உள்ள ரகசிய ரிப்போர்ட்டில் ஈரோடு, தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய எட்டு தொகுதிகளில் சுதாரிக்க வில்லை என்றால் அந்த தொகுதிகள் கையை விட்டு போய்விடும் என அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது

 தேனி, தர்மபுரி, கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் மக்கள் அதிருப்தி மற்றும் உள்ளூர் திமுக கோஷ்டிகள் காரணமாகவும் திருநெல்வேலியில் பாஜக வேகமாக பிரச்சாரம் செய்வதாகவும் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது

இதனை அடுத்து எட்டு தொகுதிகளுக்கும் கூடுதலாக சில அமைச்சர்களை நியமித்த முதல்வர் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் அறிவாலயம் பக்கமே வரக்கூடாது என்று நிபந்தனை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்களில் மேற்கண்ட எட்டு தொகுதிகளில் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva