ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (12:04 IST)

அசத்தாலான சிறப்பம்சங்களோடு வெளியானது Realme 12x 5G! – விலை இவ்வளவுதானா?

Realme 12X 5G
குறைவான விலையில் பல சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வெளியாகியுள்ளது Realme 12x 5G.


 
இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் ரியல்மி நிறுவனம் தற்போது 5ஜி தொழில்நுட்பம் கொண்ட புதிய Realme 12x 5G ஸ்மார்ட்போனை ரூ.15,000க்குள் 3 வகையான ரேம் வசதிகளோடு அறிமுகம் செய்துள்ளது.

Realme 12x 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.72 இன்ச் டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட்
  • மீடியாடெக் டைமென்சிட்டி 6100 ப்ளஸ் சிப்செட்
  • 2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 OS
  • 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம் சப்போர்ட்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 2 TB வரை சப்போர் செய்யும் மெமரி கார்டு ஸ்லாட்
  • 50 MP + 2 MP ப்ரைமரி டூவல் கேமரா
  • 1080p குவாலிட்டி 30 fps ஃபுல் ஹெச்டி ரெக்கார் வசதி
  • 8 எம்பி முன்பக்க செல்ஃபி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 45 W SUPERVOOC சார்ஜ், ரிவர்ஸ் சார்ஜ்
 
இந்த புதிய Realme 12x 5G ஸ்மார்போன் Twilight Purple, Woodland Green ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை
  • 4 GB RAM + 128 GB Memory – Rs.11,999
  • 6 GB RAM + 128 GB Memory – Rs.13,499
  • 8 GB RAM + 128 GB Memory – Rs.14,999
 
Edit by Prasanth.K