1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (19:59 IST)

நான் சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்துள்ளேன்-கமல்ஹாசன்

Kamal Haasan and Durai Vaiko.
18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம்  மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்தியா கூட்டணியில் உள்ள திமுக கூட்டணியில்  மதிமுக, விசிக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது:  ''நான் சீட்டிற்காக வரவில்லை. நாட்டிற்காக வந்துள்ளேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ் நாடு இருந்திருக்கும். உங்கள் மனங்களிலும் எனக்கும் இடமுண்டு. உங்கள் இல்லங்களிலும் எனக்கு இடமுண்டு என்பதை அறிவேன். தமிழ் நாடு மக்களுக்கும் இந்தியாவுக்கும்  எனக்கும் உள்ள காதல் சாதாரணமான  காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது'' என்று கூறினார்.