1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk suspended thirumurugan joins in admk

இன்பநிதிக்கு பாசறை அமைத்த திமுக நிர்வாகி நீக்கம்: திடீரென அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு..!

திமுக
இன்பநிதிக்கு பாசறை அமைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் உடனே அவர் அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 திமுக நிர்வாகியாக இருந்த திருமுருகன் என்பவர் இன்பநிதிக்கு பாசறை அமைத்ததால் ஏற்பட்ட சர்ச்சைக்கு காரணமாக அவர் கடந்த செப்டம்பர் மாதம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட திருமுருகன் இன்று திடீரென எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு விரைவில் அதிமுகவில் பொறுப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில்  திமுக நிர்வாகி நிர்வாகி இணைந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு நீக்கப்படுகிறதா? யூஜிசி வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு..!